காவேரிப்பட்டணம் அருகேமரம் விழுந்து விவசாயி பலி

காவேரிப்பட்டணம் அருகேமரம் விழுந்து விவசாயி பலி
Published on

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அடுத்த கோனேரிகொட்டாயை சேர்ந்தவர் சோலை (வயது 60). விவசாயி. இவர் கடந்த 22-ந் தேதி மாலை தனது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள நிலத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளார். அப்போது பலத்த காற்றில் அருகில் இருந்த தென்னை மரம் வேரோடு சாய்ந்து சோலை மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com