கோட்டப்பட்டி அருகேடிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி

கோட்டப்பட்டி அருகேடிராக்டர் கவிழ்ந்து வாலிபர் பலி
Published on

அரூர்:

கோட்டப்பட்டி அருகே சாலையோர பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

டிராக்டர் கவிழ்ந்தது

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள சட்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோ (வயது 27). இவர் தனது உறவினருக்கு சொந்தமான டிராக்டரை சர்வீஸ் செய்வதற்காக அரூரில் உள்ள ஒரு பட்டறைக்கு ஓட்டி வந்தார்.

அங்கு சர்வீஸ் பணிகள் முடிந்த பின்னர் டிராக்டரை ஓட்டிக்கொண்டு சட்டையம்பட்டிக்கு புறப்பட்டார். பொய்யப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து ஓட தொடங்கியது. பின்னர் சாலை ஓரத்தில் உள்ள குழியில் கவிழ்ந்தது.

வாலிபர் பலி

இதனால் இடிபாடுகளில் சிக்கிய இளங்கோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி அந்த பகுதியில் இருந்தவர்கள் கோட்டப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளங்கோவின் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com