பாப்பாரப்பட்டி அருகேமொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு

பாப்பாரப்பட்டி அருகேமொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு
Published on

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி பேரூராட்சி அ.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் காவேரியப்பன் (வயது 56). விவசாயி. இவர் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு தனது பக்கத்து வீட்டுக்காரரான முனுசாமி என்பவர் ஓட்டி சென்ற ஒரு மொபட்டில் அமர்ந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாப்பாரப்பட்டி- பாலக்கோடு சாலையில் தொட்டிலாம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காவேரியப்பன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.ப்பாரப்பட்டி பேரூராட்சி அ.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் காவேரியப்பன் (வயது 56). விவசாயி. இவர் மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு தனது பக்கத்து வீட்டுக்காரரான முனுசாமி என்பவர் ஓட்டி சென்ற ஒரு மொபட்டில் அமர்ந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பாப்பாரப்பட்டி- பாலக்கோடு சாலையில் தொட்டிலாம்பட்டி அருகே சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட காவேரியப்பன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com