கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலி

கடத்தூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி வாலிபர் பலி
Published on

மொரப்பூர்:

கடத்தூர் அருகே உள்ள தா.அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜா மகன் லட்சுமணன் (வயது 32). இவருக்கும் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள புளியம்பட்டி பகுதியை சேர்ந்த நதியா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நதியா கர்ப்பம் அடைந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக லட்சுமணன் தனது மோட்டார் சைக்கிளில் த.அய்யம்பட்டியில் இருந்து புளியம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மணியம்பாடி அருகே சென்றபோது எதிரே வேகமாக வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கடத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com