கார் மோதி வடமாநில தொழிலாளி பலி

கார் மோதி வடமாநில தொழிலாளி பலி
Published on

தேன்கனிக்கோட்டை:

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ராமு (வயது 37). இவர் தேன்கனிக்கோட்டை தாலுகா உப்பாரப்பள்ளியில் தங்கியிருந்தார். அத்துடன் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று உப்பாரப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் மோதி படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியில் ராமு உயிரிழந்தார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com