தளி அருகேஏரியில் மூழ்கி முதியவர் பலி

தளி அருகேஏரியில் மூழ்கி முதியவர் பலி

Published on

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி அருகே உள்ள அல்லேமரத்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் கெம்பையா (வயது 60). இவர் சம்பவத்தன்று நெல்லுமார் பகுதியில் உள்ள ஏரியில் மீன்பிடிக்க சென்றார். அப்போது ஏரிக்குள் தவறி விழுந்த அவர் தண்ணீரில் தத்தளித்தார். பின்னர் சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தளி போலீசார் கெம்பையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மீன் பிடிக்க சென்ற முதியவர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com