ஏரியில் மூழ்கி மூதாட்டி சாவு

ஏரியில் மூழ்கி மூதாட்டி சாவு
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பையர்நத்தம் பொந்திக்கல் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி சின்ராஜ் (வயது 74). இவர் தனது மருமகன் பிரசன்னா வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு அடிக்கடி ஞாபக மறதி ஏற்பட்டு வீட்டில் இருந்து வெளியே சென்று விடுவார். பின்னர் தெரிந்தவர்கள் அழைத்து வந்து வீட்டில் விட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் காலை பிரசன்னா வேலைக்கு சென்று விட்டு மாலை வந்து பார்த்த போது சின்ராஜ் வீட்டில் இல்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பையர்நத்தம் ஏரியில் சின்ராஜ் இறந்து கிடந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில் பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சின்ராஜ் ஏரியில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com