பாலக்கோடு அருகே ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி சிறுவன் சாவு

பாலக்கோடு அருகே ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி சிறுவன் சாவு
Published on

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பள்ளிக்கூடத்தான் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவருடைய மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு 9 வயதில் தினகரன் என்ற மகனும், 7 வயதில் வெற்றிமாறன் என்ற மகனும் இருந்தனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மகேஸ்வரி மகேந்திரமங்கலம் அருகே நல்லம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு மகன்களுடன் சென்றார். இந்த நிலையில் நேற்று மாலை தனது பாட்டியுடன் வெற்றிமாறன் அத்தூர்னஅள்ளியில் உள்ள ஏரிக்கு ஆடு மேய்க்க சென்றான். அப்போது ஏரியில் சிறுவர்கள் குளித்து கொண்டிருந்ததை கண்ட வெற்றிமாறன் பாட்டிக்கு தெரியாமல் ஏரியில் சென்று குளித்தான். அப்போது ஏரியில் உள்ள சேற்றில் சிக்கி மூச்சுத்திணறி மயக்கம் அடைந்தான். இதனை பார்த்த மற்ற சிறுவர்கள் கூச்சலிடவே உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுவனை மீட்டு பாலக்கேடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர் அவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பபட்டது. இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com