மோகனூர் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு

மோகனூர் அருகேசேலையில் தீப்பிடித்து மூதாட்டி உயிரிழப்பு
மோகனூர் அருகே சேலையில் தீப்பிடித்து மூதாட்டி சாவு
Published on

மோகனூர்:

மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளி ஊராட்சி சாலை தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்த சின்னசாமி மனைவி சின்னம்மாள் (வயது 76). இவர் தனது மகன் வீட்டின் அருகே தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் சின்னம்மாள் வீட்டில் கியாஸ் அடுப்பை பற்ற வைத்ததாக தெரிகிறது. அப்போது கியாஸ் வராததை தொடர்ந்து அடுப்பை அப்படியே விட்டுவிட்டு வீட்டின் வெளியில் வேலை செய்துவிட்டு மீண்டும் வீட்டுக்குள் சென்று கியாஸ் அடுப்பை பற்ற வைத்தாராம்.

அப்போது திடீரென சின்னம்மாள் சேலையில் தீப்பிடித்து பலத்த தீக்காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்ச பலனின்றி சின்னம்மாள் இறந்தார். இதுகுறித்து அவருடைய மகன் சுப்ரமணியன் (வயது 54) மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சப்-இன்ஸ்பெக்டர் இளைய சூரியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com