சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த தந்தை, மகன் 3-ம்ஆண்டு நினைவு நாள்

சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த தந்தை, மகன் 3-ம்ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த தந்தை, மகன் 3-ம்ஆண்டு நினைவு நாள்
Published on

தட்டார்மடம்:

சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் 3-ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று ஏ.பி.ஜே செல்போன் கடை அருகில் நடந்தது. இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ கலந்து கொண்டு, அவர்களது உருவப்படத்துக்கு மாலையணிவித்து மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார். அவரது மகள் பெர்சிஸ் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். முன்னதாக சேகரகுருவானவர் டேவிட் ஞானையா ஜெபித்தார். இதில் காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் சங்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் அந்தோணிசுரேஷ், மாவட்ட பொருளாளர் எடிசன், ஊடகப்பிரிவு செயலாளர் முத்துமணி, வட்டாரத் தலைவர்கள் சக்திவேல்முருகன், பார்த்தசாரதி, ஒன்றிய கவுன்சிலர் குருசாமி, நகர காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்கள் கதிர்வேல், நாராயணன், மாநில வர்த்தக பிரிவு செயலாளர் பிரபு, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பாஸ்கர், மாவட்ட மகிளா காங்கிரஸ் துணைத் தலைவர் ஜாக்குலின், மாவட்ட செயலாளர் வசுமதி, வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து சாஸ்தாவிநல்லூர் விவசாய நலச்சங்க செயலாளர் லூர்துமணி தலைமையில் சங்க நிர்வாகிகள் ரவிச்சந்திரன், செந்தில், அலெக்ஸ், ராஜா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இதைபோல் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் தமிழ் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, வழக்கறிஞர் பிரிட்டோ, பேராசிரியை பாத்திமாபு, மக்கள் கண்காணிப்பு இயக்க பிரதீப், பச்சை தமிழகம் நிறுவனர் உதயகுமார், மனித உரிமைக்கான குடிமககள் இயக்க மாநில அமைப்பாளர் இசக்கிமுத்து உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் அவர்களது உருவப்படத்துக்கு அஞ்சலி செலித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com