புதிய வருமான வரி சட்டத்தில் டிஜிட்டல் முறை ஊக்குவிப்பு: அதிகாரிகள் தகவல்

புதிய வருமான வரி சட்டம் ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
புதிய வருமான வரி சட்டத்தில் டிஜிட்டல் முறை ஊக்குவிப்பு: அதிகாரிகள் தகவல்
Published on

சென்னை,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2026-2027-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அதில் 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ‘1961-ம் ஆண்டு வருமான வரி சட்டம்' அதற்குமாற்றாக ‘புதிய வருமான வரிசட்டம்- 2025' கொண்டுவரப்பட்டு உள்ளது. இது வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

இந்த சட்டம் வரிவிதிப்புகளை எளிமையாக்குவதையும், சட்ட சிக்கல்களை குறைப்பதையும், டிஜிட்டல் முறையை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. புதிய வருமான வரி சட்டம் எளிமைப்படுத்தப்பட்ட சட்டமாகும். பழைய சட்டத்தில் இருந்த 50 சதவீதத்திற்கும் அதிகமான சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டு, சட்டம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

புதிய சட்டத்திலும், ஏற்கனவே உள்ள புதிய வரி முறை மற்றும் பழைய வரி முறை இரண்டும் தொடரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. புதிய வருமான வரி சட்டத்தில் வருமான வரி தாக்கல் செய்யும் நடைமுறை எளிதாக மாற்றப்பட்டு உள்ளது. சாதாரண குடிமக்கள் எளிதாக தாக்கல் செய்ய வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

காலக்கெடுவுக்கு பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரி அறிக்கைகளுக்கு ‘ரீபண்ட்’ பெற புதிய சட்டம் அனுமதிக்கிறது. முந்தைய ஆண்டு மற்றும் மதிப்பீட்டு ஆண்டு என்ற வேறுபாடு நீக்கப்பட்டு, ‘வரி ஆண்டு' என்ற ஒரே கட்டமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த புதிய சட்டம், வரி செலுத்துவோர் இணக்கத்தை எளிதாக்குவதற்கும், வரி ஏய்ப்பை குறைப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com