ஏகாத்தம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

திருவள்ளூர் மாவட்டம் ஏகாத்தம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
ஏகாத்தம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
Published on

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வாணியஞ்சத்திரம் கிராமத்தில் கிராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ ஏகாத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா நேற்று இரவு நடைபெற்றது.

இதை முன்னிட்டு சனிக்கிழமை மதியம் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், மாலை அக்னிசட்டி ஏந்தி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை காலை அம்பாளுக்கு தூப தீப ஆராதனையும், மாலை காப்பு கட்டி விரதம் இருந்த 500 பக்தர்கள் ஊர் எல்லையில் கங்கை நீராடினர். பின்னர், அந்த பக்தர்களை அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்பின்னர், கோவில் அருகே அமைக்கப்பட்டு இருந்த தீ குண்டத்தில் ஒருவர் பின், ஒருவராக இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இதை தொடர்ந்து இன்று காலை சாமி வீதியுலா நடைபெற்றது. இந்த விழாவில் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com