காமாட்சியம்மன், முனீஸ்வரர் கோவிலில் தீமிதி விழா

காமாட்சியம்மன், முனீஸ்வரர் கோவிலில் தீமிதி விழா
காமாட்சியம்மன், முனீஸ்வரர் கோவிலில் தீமிதி விழா
Published on

வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி சிங்கப்பெருமாள் குத்தகையில் அமைந்துள்ள காமாட்சியம்மன், முனீஸ்வரர் காவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி முனீஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகம்நடந்தது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுசாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து குதிரை வாகனத்தில் முனீஸ்வரன் வீதி உலா வந்தது. பின்னர் தீக்குண்டத்தில் ஏராளமான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com