திருத்தணியில் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா

திருத்தணியில் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருத்தணியில் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா
Published on

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காந்திரோடு பகுதியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தீமிதி திருவிழா நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான தீமிதி திருவிழா நேற்று காலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை, கணபதி, நவகிரக ஹோமம், கோ பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 8 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் காலையில் மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் சிறப்பு தீபாராதனையும், தினமும் மதியம் 1 மணி முதல் மாலை 5.30 மணி வரை மகாபாரத தொடர் சொற்பொழிவும் நடக்க உள்ளது. அடுத்த மாதம் 9-ந் தேதி காலை துரியோதனன் படுகளமும், மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com