தமிழ்மொழியின் தொன்மை குறித்த தவறான தகவல்: முதலமைச்சர் பழனிசாமிக்கு தினகரன் வலியுறுத்தல்

தமிழ்மொழியின் தொன்மை குறித்த தவறான விவகாரத்தில் முதலமைச்சர் பழனிசாமிக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்மொழியின் தொன்மை குறித்த தவறான தகவல்: முதலமைச்சர் பழனிசாமிக்கு தினகரன் வலியுறுத்தல்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்மொழியின் தொன்மை குறித்த தவறான தகவலை போல பாடப்புத்தகங்களில் இருக்கும் குறைகளை கண்டறிந்து உடனடியாக சரி செய்ய சிறப்புக்குழு ஒன்றை அமைத்திட வேண்டும்.

அரசு தயாரித்திருக்கின்ற பாடப்புத்தகங்கள் அனைத்தையும் மீளாய்வு செய்து குறைகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கான ஏற்பாட்டினை செய்திட வேண்டும். மேலும் இப்படி பட்டவர்த்தனமாக வரலாற்றைத் திரித்து பாடங்களைத் தயாரித்தவர்கள், இனிமேல் அரசு சார்ந்த எந்த குழுக்களிலும் இடம்பெறுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ் மொழியை சிறுமைப்படுத்திய விவகாரத்தில் 12 -ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகம் தயாரிப்பு குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புத்தகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியும் நீக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com