தினத்தந்தி - எஸ்.ஆர்.எம். தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் கல்வி கண்காட்சி தொடங்கியது...!

தினத்தந்தி - எஸ்.ஆர்.எம். தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது.
தினத்தந்தி - எஸ்.ஆர்.எம். தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் கல்வி கண்காட்சி தொடங்கியது...!
Published on

திருச்சி,

திருச்சியில் தினத்தந்தி - எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழிநுட்ப நிறுவனம் இணைந்து நடத்தும் 2 நாள் கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது. சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்வி கண்காட்சியை எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் டாக்டர்.மால் முருகன், திருச்சி தினத்தந்தி மேலாளர் சிவசுப்ரமணியன் உள்ளிட்டேர் கலந்துகெண்டு குத்து விளக்கேற்றி கண்காட்சியை தெடங்கி வைத்தனர்.

இதில், 50-க்கும் மேற்பட்ட கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் அரங்குகள் அமைத்துள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மேற்படிப்பை தேர்வு செய்வதற்கான வழிகாட்டு குறிப்புகளை கல்வி ஆலேசகர்கள் வழங்கி வருகின்றனர்.

கண்காட்சியில், திருச்சி, துறையூர் முசிறி, குளித்தலை, மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவெறும்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானேர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com