தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி
Published on

கீழே விழும் வாகன ஓட்டிகள்

பெரம்பலூர் நகரப்பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

வாகன ஓட்டிகள், பெரம்பலூர்.

நோய் தொற்று பரவும் அபாயம்

பெரம்பலூர் பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் பயணிகள் கழிவறைக்கு செல்லாமல் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பஸ் நிலைய பகுதியில் பிளிசிங் பவுடர் தெளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

செந்தமிழ்செல்வி, பெரம்பலூர்.

குறித்த நேரத்திற்கு வராத பஸ்கள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நாரணமங்கலத்தில் ஏரளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கென காலை, மாலை நேரங்களில் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் குறித்த நேரத்திற்கு வராததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மாணவர்கள், நாரணமங்கலம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com