தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
Published on

ஒளிராத தெருவிளக்கு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் ஊராட்சி வைகை வடகரை பகுதியில் பல நாட்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கலாம் கார்த்திகேயன், திருப்புவனம்.

கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

காரைக்குடியில் இருந்து மதுரை செல்லும் அரசு பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பயணிகள் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜாராம், சுப்பிரமணியபுரம்.

சுகாதார சீர்கேடு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சுப்பிரமணியபுரம் வடக்கு சம்பந்தர் தெருவில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் துற்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி நிற்கும் சாக்கடை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகவேல், காரைக்குடி.

நடவடிக்கை எடுக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் மேலூர் ரோட்டில் உள்ள கோர்ட்டு பஸ் நிறுத்தம் அருகே இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால் இரவு நேரங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. அனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின் விளக்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படுமா?

பொதுமக்கள், சிவகங்கை.

சேதமடைந்த பயணிகள் நிழற்குடை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலூகா தஞ்சாக்கூர் கிராமத்தில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த பயணிகள் நிழற்குடை மிகவும் சேதமடைந்து விழும் நிலையில் உள்ளது.இதனால் பஸ் வரும் வரை காத்திருப்பவர்கள் அச்சத்துடன், இருக்க வேண்டி உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த நிழற்குடையை அகற்றி புதிய பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும்.

பொதுமக்கள், தஞ்சாக்கூர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com