திண்டுக்கல்: கம்யூனிஸ்ட் , பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே மோதல்

மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்: கம்யூனிஸ்ட் , பா.ஜ.க. நிர்வாகிகள் இடையே மோதல்
Published on

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கிளர்ச்சி பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மதுரையில் இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க.வினர் நடத்தும் முருகன் மாநாடு குறித்து விமர்சித்து பேசப்பட்டது.

இதையடுத்து, பா.ஜ.க.வினரும், இந்து முன்னணியினரும் அங்கு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் கைகலப்பாக மாறி இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கினர். மோதலின்போது பா.ஜ.க.நிர்வாகிகளும், மார்க்சிஸ்ட் நிர்வாகிகளும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் மோதலில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com