திண்டுக்கல் சரக டிஐஜி வந்திதா பாண்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம்

திண்டுக்கல் சரக டிஐஜி வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை,
புதுக்கோட்டை எஸ்.பி.யாக இருந்த வந்திதா பாண்டே ஐ.பி.எஸ். சில வாரங்களுக்கு முன்பு திண்டுக்கல் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் வந்திதா பாண்டே தற்போது மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதன்படி வந்திதா பாண்டேவை மத்திய அரசின் இளைஞர் விவகாரத் துறை இயக்குராக நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 5 ஆண்டுகள் அல்லது அடுத்த கட்ட உத்தரவு வரும் வரை வந்திதா பாண்டே மத்திய அரசு பணியில் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எஸ். அதிகாரி வந்திதா பாண்டேவின் கணவர் வருண்குமார் ஐ.பி.எஸ். திருச்சி டிஐஜியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






