திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 66 செ.மீ. மழை பெய்தது

கொடைக்கானல் ரோஜா பூங்காவில் அதிகபட்சமாக 109 மி.மீ. மழை பெய்தது.
மழை
Published on: 

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த கனமழையால், ஒரே நாளில் 659.92 மி.மீ. மழை பதிவானது.

மழை

திண்டுக்கல் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அதிலும் ஒரு சில பகுதிகளில் விடிய, விடிய நேற்று அதிகாலை வரை மழை கொட்டியது. இதில் அதிகபட்சமாக கொடைக்கானல் ரோஜா பூங்காவில் 109 மி.மீ., திண்டுக்கல்லை அடுத்த காமாட்சிபுரத்தில் 106.8 மி.மீ., மழை பதிவானது.

அதே போல் நிலக்கோட்டையில் 96.8, சத்திரப்பட்டியில் 69.8., வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் 57, வேடசந்தூர் புகையிலை ஆராய்ச்சி மையத்தில் 56, பழனியில் 54, கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 42.12. திண்டுக்கல்லில் 36.2. நத்தத்தில் 32.2 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 659.92 மி.மீ. மழை பதிவானது. இதன்மூலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக ஒரேநாளில் 66 செ.மீ. மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com