திண்டுக்கல்; வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20,000 பணம் - 3 பவுன் நகை திருட்டு

பூண்டு வியாபாரி வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
திண்டுக்கல்; வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20,000 பணம் - 3 பவுன் நகை திருட்டு
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்தவர் சின்னையா(64). இவர் பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். வியாபார விஷயமாக வெளியூர் சென்று இருந்தார். அப்போது இவரது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் ஜான்சன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com