திண்டுக்கல்: மூளை காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவி பலி

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவர் மூளை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 20 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தார்.
திண்டுக்கல்: மூளை காய்ச்சலுக்கு பிளஸ்-1 மாணவி பலி
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, இடையக்கோட்டையை சேர்ந்தவர் செல்வன் (வயது 45). இவருடைய மனைவி விஜயா. இந்த தம்பதிக்கு ஜீவிதா, விஷ்ணுபிரியா, இனிஷா(16) ஆகிய 3 மகள்களும், கவின் என்ற மகனும் உள்ளனர்.

இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளியில் இனிஷா பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில் அந்த மாணவி மூளை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் 20 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com