

சென்னை,
முருகனின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் உள்ள மலையில் தீபத்தூணில் நவம்பர் 24ம் தேதி கார்த்திகை தீபத்திருநாளன்று ஒருமுறை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த சுப்ரீம் கோர்ட்டு, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் நாளை (28.11.2026) தீபம் ஏற்ற அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், மலை முழுவதும் சி.ஆர்.பி.எப். கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு அமைதியை சி.ஆர்.பி.எப். வீரர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் நாளையே தீபம் ஏற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு மகிழ்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”கோடான கோடி முருக பக்தர்களின் எண்ணம் சுப்ரீம் கோர்ட்டில் பிரதிபலித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்து விரோதச் சக்திகளின் சூழ்ச்சிகளைச் சூரசம்ஹாரம் செய்து குன்றத்தை மீண்டும் வென்றான் முருகன்!” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.