டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் - ஐகோர்ட் உத்தரவு

3 ஆண்டுகள் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் சட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் - ஐகோர்ட் உத்தரவு
Published on

சென்னை,

10-ம் வகுப்பிற்குப் பிறகு பிளஸ் 2 படிக்காமல், டிப்ளமோ 3 ஆண்டுகள் படித்து அதன் பின்னர் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் சட்டபடிப்புக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறி கோவையைச் சேர்ந்த கோமதி என்ற மாணவி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்திய பார்கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 10-ம் வகுப்புக்கு பின் 3 ஆண்டுகள் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும், 3 ஆண்டு சட்டபடிப்பு படிக்க தகுதியானவர்கள் என பார்கவுன்சில் முடிவெடுத்ததாக தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி இனி வரும் ஆண்டுகளில் சட்ட படிப்பு தொடர்பான கொள்கை விளக்க குறிப்பில் 10-ம் வகுப்புக்கு பின் 3 ஆண்டுகள் டிப்ளமோ முடித்து பொறியியல் பட்டம் பெற்றவர்களும் 3 ஆண்டுகள் சட்ட படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்க தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com