

சென்னை,
சென்னை பல்கலையில் இயங்கும் பல்வேறு துறைகளிலும், டிப்ளமோ படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னை பல்கலையின் புவியியல் துறை, 'நிலையான வளத்திட்டல் மற்றும் மேலாண்மைக்கான புவி அறிவியல் முறைகள்' என்ற, ஓராண்டு புதிய டிப்ளமோ படிப்பை அறிமுகம் செய்துள்ளது.
சுற்றுச்சூழல் துறையில், வேலை வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கத்திலும், ஆராய்ச்சியை மேம்படுத்தும் விதமாகவும், இந்த டிப்ளமோ படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான மாணவர் சேர்க்கை, 2026 – 27ம் கல்வியாண்டில் நடக்கிறது.
சென்னை பல்கலையில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பில், அறிவியல் பாடப்பிரிவுகளை பயின்ற மாணவர்கள், இந்த டிப்ளமோ படிப்பில் சேரலாம் என, சென்னை பல்கலை தெரிவித்து உள்ளது.