அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 21-ந்தேதி முதல் நேரடி மாணவர் சேர்க்கை

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை வருகிற 21-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை வருகிற 21-ந்தேதி முதல் நடைபெற உள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2023-24-ஆம் ஆண்டிற்கான இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை முடிவுற்ற நிலையில், மேலும் சில அரசு கல்லூரிகளில் முழுமையாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சில பாடப்பிரிவுகளுக்கு, நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) சார்ந்த கல்லூரிகளில் 21.08.2023 முதல் நடைபெற உள்ளது.

மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். நிரப்பப்படாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுகளின் விவரங்களை www.tngasa.in என்ற இணையதளத்தில் "TNGASA2023-UG VACANCY"- என்ற தொகுப்பில் காணலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com