சென்னை-தாய்லாந்து இடையே நேரடி சரக்கு கப்பல் சேவை - ஒப்பந்தம் கையெழுத்து

இந்தியாவின் கிழக்கு பகுதிக்கும், தாய்லாந்திற்கும் இடையே புதிய கடல்வழி வர்த்தக இணைப்பு உருவாக உள்ளது.
சென்னை-தாய்லாந்து இடையே நேரடி சரக்கு கப்பல் சேவை - ஒப்பந்தம் கையெழுத்து
Published on: 

சென்னை,

சென்னை துறைமுகத்தில் இருந்து, தாய்லாந்தின் ரனோங் துறைமுகத்திற்கு, நேரடி சரக்கு கன்டெய்னர் கப்பல் போக்குவரத்தை தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் கிழக்கு பகுதிக்கும், தாய்லாந்திற்கும் இடையே புதிய கடல்வழி வர்த்தக இணைப்பு உருவாக உள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

‘டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ நிறுவனத்தின் கடல்வழி போக்குவரத்து பிரிவான ‘டி.சி.ஐ., சீவேஸ்’ இந்த சேவையை வழங்க இருக்கிறது. இதற்காக சென்னை துறைமுக ஆணையத்திற்கும், டி.சி.ஐ. சீவேஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த புதிய வழித்தடத்தில் ‘டி.சி.ஐ. சூர்யா’ கப்பல் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X