தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் இன்று தொடங்கின

தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் இன்று தொடங்கியுள்ளன.
தமிழகம் முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் இன்று தொடங்கின
Published on

சென்னை,

கொரோனா இரண்டாவது அலை காரணமாக மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியே பாடம் நடத்தப்பட்டது. தொற்று குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று முதல் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு கல்லூரிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வத்துடன் வந்தனர். சுமார் 60 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கின.

மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்கள் கடைபிடிப்பதை கல்லூரிகள் தீவிரமாக கவனிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com