அண்ணாமலையின் புதிய இயக்கத்துக்கான நேரடி உறுப்பினர் சேர்க்கை விரைவில் தொடக்கம்

அண்ணாமலையின் புதிய கட்சியில் ஏராளமான இளைஞர்கள் இணைந்து வருகின்றனர்.
அண்ணாமலையின் புதிய இயக்கத்துக்கான நேரடி உறுப்பினர் சேர்க்கை விரைவில் தொடக்கம்
Published on

சென்னை,

தமிழ்நாடு பா.ஜனதா முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை அந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கட்சி மேலிடத்திற்கு கடிதம் வழங்கினார். அதைத் தொடர்ந்து கட்சி மேலிடம் அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், கடந்த 5-ந் தேதி அண்ணாமலை 'வீ தி லீடர்ஸ்' என்ற புதிய இயக்கத்தை தொடங்கினார்.

அதோடு, கட்சியில் இணைய விரும்புபவர்கள் https://wetheleader.org/இணைத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார். இந்த இயக்கம் தொடங்கப்பட்ட நாள் முதல் ஏராளமான இளைஞர்கள் அண்ணாமலையின் புதிய கட்சியில் இணைந்து வருகின்றனர். அதில் பெரும்பாலானவர்கள் பா.ஜனதாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜனதாவின் பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் அண்ணாமலையின் புதிய கட்சியில் இணைந்து வருகின்றனர். இதனால், தமிழ்நாடு பா.ஜனதா தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் அண்ணாமலை தொடங்கிய புதிய கட்சியில் உறுப்பினர் சேர்க்கை 16 லட்சத்து 3 ஆயிரத்து 500-ஐ கடந்து இருந்தது. ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை மட்டும் அல்லாமல் விரைவில் நேரடி உறுப்பினர் சேர்க்கையும் நடத்த இருப்பதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com