மேலும் 10 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

மேலும் 10 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகிறது.
மேலும் 10 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
Published on

அரியலூர் மாவட்டத்தில் கரீப் கே.எம்.எஸ். 2022-2023 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு 5-ம் கட்டமாக அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் வடுகபாளையம், கோவில் எசனை, வெங்கனூர், சுள்ளங்குடி, பளிங்காநத்தம், நானாங்கூர், விளாகம், ஒரியூர், காமரசவள்ளி, பாளையப்படி ஆகிய 10 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் இன்று (புதன்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகில் உள்ள விவசாய பெருமக்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறலாம், என்று கலெக்டர் ரமணசரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com