10 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

முதற்கட்டமாக 10 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகிறது.
10 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் கரீப் கே.எம்.எஸ். 2022-23 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு முதற்கட்டமாக தொண்டமாந்துறை, வி.களத்தூர், கை.களத்தூர், ஒகளூர், அகரம்சீகூர், நன்னை, துங்கபுரம், எழுமூர், காடூர், கீழப்புலியூர் ஆகிய 10 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. 2-ம் கட்டமாக வருகிற 15-ந் தேதி குரும்பலூர், காரை ஆகிய 2 கிராமங்களிலும், 3-ம் கட்டமாக 20-ந் தேதி அரும்பாவூ, பூலாம்பாடி ஆகிய கிராமங்களில் தலா 2 இடங்களிலும், அரசலூர், வெங்கனூர், பாண்டகப்பாடி, மலையாளப்பட்டி ஆகிய கிராமங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே அருகில் உள்ள விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறலாம் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் பெரம்பலூர் துணை மண்டல மேலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com