15 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்

15 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வருகின்றன.
15 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்
Published on

அரியலூர் மாவட்டத்தில் கரீப் கே.எம்.எஸ். 2022-23 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு 2-ம் கட்டமாக உடையார்பாளையம் வட்டத்தில் இடங்கண்ணி, வாழைக்குறிச்சி, கோடாலிகருப்பூர் அருள்மொழி, கார்குடி, கங்கை கொண்ட சோழபுரம், காடுவெட்டி, சுத்துக்குளம், கோவிந்தபுத்தூர் மற்றும் முட்டுவாஞ்சேரி, செந்துறை வட்டத்தில் குழுமூர், சன்னாசிநல்லூர் மற்றும் தளவாய் கூடலூர், அரியலூர் வட்டத்தில் கண்டிராதீர்த்தம் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தில் ஸ்ரீராமன் ஆகிய 15 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் கொள்முதல் நிலையங்கள் இன்று (புதன்கிழமை) முதல் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகில் உள்ள விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறலாம் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com