அதிமுக போகும் போக்கே சரியில்லை - திமுகவில் இணைந்த பின் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் பேட்டி

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்துள்ளார்.
அதிமுக போகும் போக்கே சரியில்லை - திமுகவில் இணைந்த பின் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தொண்டைமான் பேட்டி
Published on

சென்னை,

புதுக்கோட்டைஅதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் இன்று திமுகவில் இணைந்தார். முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்ட கார்த்திக் தொண்டைமான் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுக மதவாத சக்திகளுக்கு துணை போகிறது. அதிமுக போகும் போக்கே சரியில்லை. தமிழகத்தில் மதவாத சக்திகள் தலைதூக்க கூடாது என்ற நோக்கத்தில் திமுகவில் இணைந்துள்ளேன். முதல் அமைச்சர் முக ஸ்டாலினின் நல்லாட்சியில் தமிழகம் வளர்ந்துகொண்டுள்ளது. நான் அதற்கு உறுதுணையாக இருந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கார்த்திக் தொண்டைமான்  வென்றார். அதன்பின்னர் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com