சென்னை மாநகராட்சியில் மின் விளக்குகள் 100 சதவீதம் ஒளிர்வதை கள ஆய்வு செய்திட உத்தரவு

பெருநகர சென்னை மாநகராட்சியில், 3.11 இலட்சம் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு. பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ai image
ai image
Published on: 

சென்னை

சென்னை மாநகராட்சியில் மின் விளக்குகள் 100 சதவீதம் ஒளிர்வதை கள ஆய்வு செய்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் 100 சதவீதம் ஒளிர்வதை உறுதி செய்திட நாளை மறுநாள் கள ஆய்வு செய்திட மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன்,இ.ஆ.ப, அவர்கள் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கள ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சியில், 3.11 இலட்சம் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு. பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை 100 சதவீதம் ஒளிர்வதை உறுதி செய்திடும் வகையில் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதிக்குள் கள ஆய்வு மேற்கொண்டு, அதனடிப்படையில் எரியாத மின் விளக்குகள் மற்றும் பழுதுகள் உடனடியாக சரி செய்திடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள மின் விளக்குகள் அனைத்தும் 100 சதவீதம் ஒளிர்கிறதா என்பதை நாளை மறுநாள் கள ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை அளித்திடவும். எரியாத மின் விளக்குகள் மற்றும் பழுதுகளை 48 மணி நேரத்திற்குள் சரி செய்திடவும் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்களும், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள எரியாத தெருவிளக்குகள் மற்றும் இதர பழுதுகள் தொடர்பாக 1913 என்கிற தொலைபேசியிலும், நம்ம சென்னை App மூலமும் தகவல் அளிக்கலாம் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது.

X