இயக்குனர் பாரதிராஜா மறைவு: எல்.முருகன் இரங்கல்

தமிழ் மண்ணின் மண்வாசனையையும், மக்களின் வாழ்க்கை முறையையும், உணர்வுகளையும் தனது படைப்புகள் மூலம் திரையுலகில் தனித்துவமாகப் பதிவு செய்து, தமிழ் சினிமாவிற்கு புதிய பரிமாணத்தை உருவாக்கியவர் பாரதிராஜா.
எல்.முருகன் இரங்கல்
Published on

சென்னை,

மத்திய இணை மந்திரி எல். முருகன், இயக்குனர் பாரதிராஜா மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்த் திரையுலகின் பெருமைமிகு இயக்குநரும், கிராமிய வாழ்க்கையை உலக அரங்கில் எடுத்துச் சென்ற தலைசிறந்த படைப்பாளருமான பாரதிராஜா மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது.

இரங்கல்

தமிழ் மண்ணின் மண்வாசனையையும், மக்களின் வாழ்க்கை முறையையும், உணர்வுகளையும் தனது படைப்புகள் மூலம் திரையுலகில் தனித்துவமாகப் பதிவு செய்து, தமிழ் சினிமாவிற்கு புதிய பரிமாணத்தை உருவாக்கியவர் பாரதிராஜா. அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும்.

அன்னாரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com