மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்; கலெக்டர் கார்த்திகேயன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்; கலெக்டர் கார்த்திகேயன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
Published on

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் கார்த்திகேயன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகளின் இருக்கைகளுக்கே சென்று கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

இதில பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, உபகரணங்கள் வேண்டியும், வேலைவாய்ப்பு உள்ளிட்ட சலுகைகள் கேட்டும் மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்களை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

கூட்டத்தில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.12 ஆயிரத்து 500 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலியும், மற்றொருவருக்கு ரூ.7 ஆயிரத்து 500 மதிப்பில் காதொலிக்கருவி ஆகிய நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கார்த்திகேயன் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் குமாரதாஸ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com