3 சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த மாற்றுத்திறனாளி சாவு

3 சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த மாற்றுத்திறனாளி சாவு

Published on

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த புதுகரிக்காத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சீதாராமன் (வயது 45), மாற்றுத்திறனாளி. இவரது சகோதரர் பச்சையப்பன். மண்டகொளத்தூரில் இருந்து புதுகரிக்காத்தூருக்கு 3 சக்கர வாகனத்தில் சீதாராமனும், பச்சையப்பனும் சென்றனர்.

அப்போது, வழியில் பாலத்தின் அருகே சென்ற போது, பாலத்தின் கட்டையில் மோதி வாகனத்துடன் இருவரும் கீழே விழுந்தனர். இதில் சீதாராமன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக போளூர் அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸபெக்டர் சிவகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com