மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

மயிலாடுதுறை கலெக்டர் லலிதா ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளா. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிஅளவில் நடக்கிறது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் தலைமை தாங்குகிறார். இதில் மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

இது நாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தாங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல் மற்றும் மருத்துவ சான்றுநகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படம்-1, செல்போன் எண் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com