பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி முகாம்

கூத்தாநல்லூர் அருகே பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி முகாம் நடந்தது.
பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி முகாம்
Published on

கூத்தாநல்லூர்:

சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி கூத்தாநல்லூர் அருகே உள்ள புள்ளமங்கலத்தில், கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில், எதிர்வரும் வடகிழக்கு பருவ மழையை எதிர் கொள்ளவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் முதல் நிலை மீட்பாளர்களுக்கான ஒத்திகை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, பொது மக்கள் தற்காத்துக்கொள்ள வழி முறைகள், பேரிடர் காலங்களில் செய்ய வேண்டிய மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு வீரர்கள் மூலம் ஒத்திகை பயிற்சி செய்து காண்பிக்கப்பட்டது. இந்த ஒத்திகை பயிற்சி முகாமில் கூத்தாநல்லூர் தாசில்தார் குருமூர்த்தி, ஊராட்சி தலைவர் பானுமதி மற்றும் வருவாய் துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com