பேரிடர் மீட்பு பயிற்சி

நெமிலி தாலுகா அலுவலகத்தில் பேரிடர் மீட்பு பயிற்சி நடைபெற்றது.
பேரிடர் மீட்பு பயிற்சி
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா அலுவலகத்தில் பேரிடர் காலத்தில் முதல் தகவல் அளிப்பவர்களுக்கான பயிற்சி தாசில்தார் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் பேரிடர்களில் சிக்கிக்கொள்ளும் பொதுமக்களை பாதுகாப்பான முறையில் மீட்பது குறித்தும், தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிப்பது குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது.

இதில் என்.டி.ஆர்.எப். குழுவினர், தீயணைப்பு துறையினர், காவல்துறை, சுகாதாரத் துறை, கால்நடைத்துறை, மின்சார துறை, வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com