தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி

குத்தாலத்தில் தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது
தன்னார்வலர்களுக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
Published on

குத்தாலம்:

குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில், வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் குறுவட்ட அளவில் முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மீட்பு மேலாண்மை பயிற்சி நேற்று நடந்தது. இதில் மாதிரிமங்கலம், திருவாலங்காடு, திருவாவடுதுறை ஊராட்சிகளை சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பேரிடர் பயிற்றுனர் ஜோஷி கலந்துகொண்டு பயிற்சி அளித்தார். பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து செய்முறை விளக்கம் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில், தலைமையிடத்து துணை தாசில்தார் விஜயகுமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், 3 ஊராட்சிகளை சேர்ந்த தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com