திருப்புவனம் சம்பவம் எதிரொலி: சிறப்பு தனிப்படைகள் கலைப்பு - தமிழக போலீஸ் டி.ஜி.பி. அதிரடி


திருப்புவனம் சம்பவம் எதிரொலி: சிறப்பு தனிப்படைகள் கலைப்பு - தமிழக போலீஸ் டி.ஜி.பி. அதிரடி
x

திருப்புவனம் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீஸ் நிலைய எல்லையில் உள்ள மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் திருட்டு வழக்கு ஒன்றில் சிறப்பு தனிப்படை போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், டி.ஜி.பி. சங்கர் ஜிவால் போலீஸ் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை மூலம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில், 'அதிகாரிகளின் கீழ் தேவையில்லாமல் செயல்படும் சிறப்பு தனிப்படைகளை உடனடியாக கலைத்துவிட வேண்டும். தேவைப்பட்டால் சிறப்பு புலனாய்வுக்காக உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று, தனிப்படைகளை அமைத்து கொள்ளலாம். தற்போது, கலைக்கப்படும் சிறப்பு தனிப்படைகளில் பணியாற்றும் போலீசார் வழக்கமான பணிகளுக்கு உடனடியாக மாற்றப்பட வேண்டும்' என்று, கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story