வரி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு

சங்கராபுரத்தில் வரி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
வரி செலுத்தாதவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு
Published on

சங்கராபுரம், 

சங்கராபுரம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதியில் வசித்து வரும் சிலர் பல ஆண்டுகளாக பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதையடுத்து வரியை கட்டக்கோரி சம்பந்தப்பட்டவர்களுக்கு பேரூராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் வரியை கட்டவில்லை. இதனை தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமார் உத்தரவின் பேரில் நேற்று 10 வீடுகளுக்கு சென்ற குடிநீர் இணைப்பை பேரூராட்சி ஊழியர்கள் துண்டித்தனர். கடந்த சில நாட்களாக நடந்த இந்த பணியால் மொத்தம் 150 வீடுகளுக்கு சென்ற குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து செயல் அலுவலர் சம்பத்குமார் கூறுகையில், பேரூராட்சிக்கு செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் கட்டணத்தை சம்பந்தப்பட்டவர்கள் வருகிற 31-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும். இல்லையென்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com