டிரோன் மூலம் 1200 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிப்பு

கல்வராயன்மலையில் டிரோன் மூலம் 1200 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
டிரோன் மூலம் 1200 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிப்பு
Published on

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்த 14 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரிகள் 11 பேரை மரக்காணம் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் விற்பவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புதிய முயற்சியாக டிரோன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் யாரேனும் சாராயம் காய்ச்சுகிறார்களா என கண்டுபிடிக்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி கல்வராயன்மலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால் தலைமையில் சிறப்புபடையினர் டிரோன் மூலம் சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கருதாங்காட்டு கிராம ஓடையில் சாராயம் காய்ச்சுவதற்காக 6 பேரல்களில் சுமார் 1,200 லிட்டர் சாராய ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த சாராய ஊறலை கீழே கொட்டி அழித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com