

மதுரை,
மதுரை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மைய ஆய்வாளர்கள் உதயகுமார், முத்துப்பாண்டி, முருகன் ஆகியோர் திருப்பரங்குன்றம் மலையில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமண துறவிகள் உயிர்நீத்த செய்தியை கூறும் கல்வெட்டை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த ஆய்வின் போது சமண துறவி, 'அரிட்ட நேமிபடாரர்' என்பவர் நோன்பிருந்து உயிர்நீத்த இடம் என்ற செய்தியை கூறும் கல்வெட்டை கண்டுபிடித்ததாகவும், பாண்டிய நாட்டு கல்வெட்டில் 'நிசிதிகை' என்ற சொல் முதன்முதலாக இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.