மதுரையில் ஆங்கிலேயர் கால பதுங்கு குழி கண்டுபிடிப்பு - விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதலாம் உலகப்போர் காலத்தில் அமைக்கப்பட்ட பதுங்கு குழி அருங்காட்சியகமாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ஆங்கிலேயர் கால பதுங்கு குழி கண்டுபிடிப்பு - விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு
Published on

மதுரை,

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1912 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஜேம்ஸ் ஹால் அரங்கின் கீழ் ஒரு அறை உள்ளது. பல ஆண்டுகளாக பழைய பொருட்கள சேகரித்து வைக்கப்பட்டிருந்த அந்த அறையை கடந்த மாதம் கல்லூரி நிர்வாகம் சுத்தம் செய்தது.

அப்போது அறையில் ஒரு நுழைவு பகுதியும், வெளியேற நான்கு வழிகளும் இருந்ததால், அந்த அறை ஒரு பதுங்கு குழியாக பயன்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தனர். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தின் போது, இங்கிலாந்தில் இருந்து இரும்பு தளவாடங்கள் கொண்டு வரப்பட்டு 32 அடி உயர கட்டடத்தை தாங்கும் வகையில் பதுங்கு குழி அமைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இந்த பதுங்கு குழியை அருங்காட்சியகமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு பழமையான ஓலைச்சுவடிகள், நாணயங்கள் உள்ளிட்ட பழங்கால பொருட்களை காட்சிப்படுத்த இருப்பதாகவும், விரைவில் பணிகள் நிறைவடைந்து பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட உள்ளதாகவும் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com