சங்கராபுரம் தாலுகாவை பிரித்ததில் பாகுபாடு

சங்கராபுரம் தாலுகாவை பிரித்ததில் பாகுபாடு உள்ளதாக கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் அனைத்து சங்க நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.
சங்கராபுரம் தாலுகாவை பிரித்ததில் பாகுபாடு
Published on

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம் தாலுகாவை 2 ஆக பிரித்து வாணாபுரம் என்ற புதிய தாலுகா உதயமானது. தாலுகா எல்லை மற்றும் கிராமங்ளை பிரித்த நிலையில் தற்போது சங்கராபுரம் தாலுகாவின் பரப்பளவு 294.10 சதுர கிலோமீட்டர், மக்கள்தொகை 1 லட்சத்து 57 ஆயிரத்து 783 ஆகும். இங்கு 2 வருவாய் குறுவட்டங்கள், 59 வருவாய் கிராமங்கள் மற்றும் 59 ஊராட்சிகள் உள்ளன. புதிதாக உருவான வாணாபுரம் தாலுகாவின் பரப்பளவு 431.26 சதுர கிலோ மீட்டர், மக்கள்தொகை 2 லட்சத்து 36 ஆயிரத்து 460 ஆகும். இ்ங்கு 4 வருவாய் குறுவட்டங்கள், 85 வருவாய் கிராமங்கள் மற்றும் 75 ஊராட்சிகள் உள்ளன. இந்த நிலையில் சங்கராபுரத்தை சேர்ந்த அனைத்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் 19 பல்வேறு வகையான சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் கோரிக்கை மனு கொடுத் தனர். அதில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியின் தலைநகரமாக உள்ள சங்கராபுரம் தாலுகா அதிக பரப்பளவு மற்றும் கிராமங்களை கொண்டு இருந்தது. தற்போது இந்த தாலுகாவை 2 ஆக பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட வாணாபுரம் தாலுகா 4 வருவாய் குறுவட்ட அலுவலகங்கள், அதிக பரப்பளவு, மக்கள் தொகை, வருவாய் கிராமங்கள் என 65 சதவீதம் வாணாபுரம் தாலுகாவில் சேர்க்கப்பட்டுள்ளது. தாலுகாவை பிரித்ததில் ஏற்றத் தாழ்வுகள் மற்றும் பாகுபாடு உள்ளது. இதனால் பல்வேறு கிராம மக்கள் 2 பஸ்கள் ஏறி வாணாபுரம் தாலுகா அலுவலகத்துக்கு செல்லவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் சங்கராபுரத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரம் பாதிக்க ப்படுகிறது. எனவே தாலுகா எல்லை வரையறை சமமாக சீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com