தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு மின் கட்டணத்தில் பாகுபாடு? - தமிழக அரசு விளக்கம்

பொது வழிபாட்டு தலங்கள் அனைத்திற்கும் ஒரே மாதிரியான மின் கட்டணமே நிர்ணயிக்கப்படுகிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

தமிழகத்தில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு தமிழக அரசு மின் கட்டணத்தில் பாகுபாடு காட்டுவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தனது சமூக தலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரபூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

இது கடந்த 2019-ம் ஆண்டில் இருந்தே பரப்பப்படுகிறது. கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் என பொது வழிபாட்டு தலங்கள் அனைத்தும் 'பொது வழிபாட்டு தலங்கள்' என்றே வகைப்படுத்தப்படுகின்றன. இவை அனைத்திற்கும் ஒரே மாதிரியான மின் கட்டணமே நிர்ணயிக்கப்படுகிறது.

2024-ம் ஆண்டு கட்டண விதிப்பின்படி, கோவில், மசூதி மற்றும் தேவாலயம் உள்ளிட்ட பொது வழிபாட்டுத் தலங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.6.20 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் 120 யூனிட்டுக்கு அரசு மானியமாக ஒரு யூனிட்டுக்கு ரூ.3.13 மானியம் அளிக்கிறது. வதந்தியை பரப்பவேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com