நெல்லையில் ஏ.டி.எம். மையங்களில்கிருமிநாசினி தெளிப்பு

நெல்லையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி, ஏ.டி.எம். மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
நெல்லையில் ஏ.டி.எம். மையங்களில்கிருமிநாசினி தெளிப்பு
Published on

நெல்லையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதையொட்டி, ஏ.டி.எம். மையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

காரோனா பரவல் அதிகரிப்பு

நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், டவுன் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நெல்லை மாநகர பகுதிகளில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

அதன்படி மாநகர் நல அலுவலர் சரோஜா தலைமையில் சுகாதார பணியாளர்கள் புகை மருந்து அடித்தும், கிருமி நாசினி தெளித்தும் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருமிநாசினி தெளிப்பு

நெல்லை சந்திப்பு பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் ஏ.டி.எம். மையங்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று நடைபெற்றது.

இதில் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நெல்லை சந்திப்பு உதவி போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரன் தனிமைப்படுத்தி கொண்டது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com